அமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள்

Monday, May 30th, 2016

அமெரிக்கா வான்வெளியில்  அமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள் பறப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது வேற்றுகிரகவாசிகளின் உளவு பார்க்கும் கருவியா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இகியோ  மாகாணத்தின் டேடன்  நகரில் வசிக்கும் தம்பதியினர் இக்காட்சியை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இருவரும் வீட்டிலிருந்து சூரியன் மறைவதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, இந்த அதிசய பொருள் வானத்தில் மிதந்து கொண்டிருந்ததை கண்டு வியந்துள்ளனர், பின்னர் அதை படம் பிடித்து பதிவு செய்துள்ளனர்.

பின்னர், ஏலியன்ஸ் நிகழ்வுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் செக்யூர் டீம் 10 என்ற குழுவிற்குஇந்த வீடியோ காட்சியை அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய அக்குழு உறுப்பினர் ஒருவர், அதிசய பொருளின் காட்சியை அதே பகுதியில் வசிக்கின்ற மூன்று பேர் பதிவு செய்துள்ளதாகவும், இது வேற்றுகிரகவாசிகளின் கருவியாக இருக்கும் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: