அமெரிக்கா, அவுஸ்திரேலியாவை அச்சுறுத்திய ஏலியன்ஸ்: கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

Tuesday, April 25th, 2017

அமெரிக்கா, அவுஸ்திரேலிய வான்பரப்பில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தோன்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கா, நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி சிலைக்கு மேல் வட்ட வடிவில் அதிக வெளிச்சத்துடன் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தோன்றியுள்ளது.

ஹட்சன் நதியில் கப்பலில் பயணித்த ஒருவர் இந்த புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.குறித்த புகைப்படத்தில் உள்ளது ஏலியன்ஸ் விண்கலமாக இருக்கலாம் என பலர் தெரிவித்துள்ளனர்.அதே சமயம் அவுஸ்திரேலியா வானில் இரண்டு அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தோன்றியது வீடியோவாக படமாக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவில் இரண்டு அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் வானில் அதிவேகமாக பறந்து செல்கிறது.அடிலெய்ட் வான்பரப்பில் இந்நிகழ்வு நடந்துள்ளது, இரண்டு மர்ம பொருளும் 5 நொடிகளில் மறைந்து விடுகிறது. இதைக்கண்ட ஏலியன்ஸ் ஆர்வலர்கள் இது ஏலியன்ஸ் விண்கலம் என தெரிவித்துள்ளனர். எனினும், வீடியோவை கண்ட பலர் இவை விண்கற்கள் தான் என குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: