அமெரிக்கா அணுவாயுததிறன்களை விரிவாக்க வேண்டும் – ட்ரம்ப்!

Friday, February 24th, 2017

அணுவாயுததுறையில் அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே ட்ரம்ப் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா அணுஆயுததிறன்களில் தற்போது பின்தங்கி உள்ளது. இவ்விடயத்தில் அமெரிக்கா உயர்நிலையில் இருப்பதே சிறப்பு. வேறு எந்தவொரு நாடும் அணுஆயுதங்களை பயன்படுத்தாது இருந்திருப்பின் அது உன்னதமாக இருந்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆயுதங்களை கட்டுப்படுத்தும் குழுவின் தகவல்களின் பிரகாரம் அமெரிக்கா 7100 அணுஆயுதங்களையும் ரஷ்யா 7300 அணுஆயுதங்களையும் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே அணுஆயுததிறன்களில் அமெரிக்கா பின்தங்கியுள்ளது என்ற ஜனாதிபதியின் கவலைக்கு காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் அமெரிக்காவின் அணுவாயுத பிரச்சினை தொடர்பில் ட்ரம்ப் வெளியிடும் முதல் கருத்தாக இது அமைந்துள்ளது.

donaldtrump-21-1466495345 (1)

Related posts: