அமெரிக்காவை சீண்டும் வடகொரியா?

Tuesday, April 25th, 2017

வடகொரியாவில் இருந்து வெளியேற முற்பட்ட அமெரிக்க பிரஜை ஒருவர் பியாங்யாங் சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், வடகொரியாவினால் கைது செய்யப்பட்டுள்ள மூன்றாவது நபர் இவராவார்.

குறித்த நபர் சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக கடமையாற்றி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையிலேயே வடகொரியாவை விட்டு வெளியேற முற்பட்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இருநாடுகளுக்குமிடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வடகொரியாவின் இந்த கைது நடவடிக்கை அமெரிக்காவை மேலும் ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: