அமெரிக்காவை எதிர்த்து இலங்கை வாக்களிப்பு!

ஜெருசலேமை அமெரிக்கா இஸ்ரேலின் தலைநகராக அண்மையில் அங்கீகரித்தது. இந்தநிலைப்பாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இலங்கை ஆதரவளித்துள்ளது.
மொத்தமாக இந்த பிரேரணைக்கு 128 நாடுகள் ஆதரவளித்ததுடன், அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன.35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கான உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்கூட்டியே தேர்தலுக்கு தயாராகும் ஆஸ்திரேலிய!
உலக பணக்காரர்கள் பட்டியலில் தமிழர்கள்!
பாகிஸ்தானில் மோதல் - பலர் பலி!
|
|