அமெரிக்காவை எச்சரித்த வடகொரியா!

Saturday, March 5th, 2016

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வடகொரியா 6 ஏவுகணைகளை ஏவியுள்ளது.

கடந்த ஜனவரி 6-ம் திகதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோத னையை வடகொரியா நடத்தியது.

இதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோத னையை வடகொரியா நடத்தியது.

ஹைட்ரஜன் குண்டு, ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வடகொரியாவின் நட்பு நாடுகளான சீனாவும் ரஷ்யா வும் கூட அதிருப்தி வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து வடகொரி யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முக்கிய ஆலோசனை நடத்தப் பட்டது.

மொத்தம் 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா. தீர்மானம் நிறை வேற்றப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் கொரிய தீபகற்ப பகுதி யில் 6 ஏவுகணைகளை வடகொரியா அடுத்தடுத்து ஏவியது. குறைந்த தொலைவு பாயும் திறன் கொண்ட அந்த ஏவுகணைகள் கடலில் விழுந்து வெடித்துச் சிதறின.

அமெரிக்கா மற்றும் தென்கொரி யாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா இந்த ஏவுகணைகளை கடலில் வீசியிருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Related posts: