அமெரிக்காவை எச்சரிக்கும் விளாடிமிர் புடின் !

Thursday, December 6th, 2018

பனிப்போர் கால ஆயுதத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால் அதன்மூலம் தடைசெய்யப்பட்டுள்ள ஏவுகணைகளை ரஷ்யாவும் தயாரிக்க ஆரம்பிக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷ்யா ஏற்கெனவே மீறிவிட்டது என நேட்டோ குற்றஞ்சாட்டியுள்ள நிலையில்இ புடினின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் குறுகிய மற்றும் இடைநிலை தாக்குதல் ஏவுகணைகள் தடை செய்யப்பட்டன.

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான பூர்வாங்க குற்றச்சாட்டுதான் இது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

இடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தால் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களை பல நாடுகள் தயாரித்துள்ளதாக தொலைக்காட்சி உரையில் ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை ரஷ்யாவின் நடவடிக்கைகளால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: