அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக தொடருந்தில் சென்ற கிம் ஜோங்!

Sunday, February 24th, 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான இரண்டாவது முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் அன் தொடருந்து மூலம் வியட்நாம் பயணித்துள்ளார்.

இந்த தொடருந்து பயணத்திற்காக உள்ளுர் நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில், சீன எல்லையில் உள்ள டேன்டொங் நகரை அவர் சென்றடைந்தார் என வடகொரிய அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வட கொரியத் தலைவர் தனது சகோதரி கிம் யோ ஜோங் மற்றும் தனது பிரதான பேச்சாளர்களுள் ஒருவரான முன்னாள் ஜெனரல் கிம் யோங் சோலுடனும் அவர் வியட்நாம் பயணித்துள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இடம்பெறவுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த வருடம் இடம்பெற்ற முதலாவது முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக இந்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அணுஆயுத தவிர்ப்பு தொடர்பில் எவ்வாறான முன்னேற்றகரமான தீர்மானங்கள் இரு தரப்பினராலும் எட்டப்படவுள்ளது என்பது குறித்து சர்வதேசத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் அன், தமது இந்த பயணத்தில் வியட்நாமுக்கும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்வார் என வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

Related posts: