அமெரிக்காவுக்கு கடும் கண்டனத்தை வெளயிட்டுள்ள ஈரான்!

Tuesday, May 22nd, 2018

அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை தமக்கு எதிராக விதிக்கவுள்ளமைக்கு, ஈரான் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

வரலாற்றில் மிகக்கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கவிருப்பதாக, அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜாவிட் சாரிப் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.இந்த அறிவிப்பின் மூலம், அமெரிக்காவின் தோல்வியடைந்த கொள்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், அமெரிக்காவின் இந்த செயற்பாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Related posts: