அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா!
Monday, May 7th, 2018அமெரிக்காவினால் வெளியிடப்படும் சில கருத்துக்கள் சமாதானத்தை குழப்பும் வகையில் இருப்பதாக வடகொரிய குற்றம் சுமத்தியுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு வார்த்தை இடம்பெறவுள்ள நிலையில், இராணுவத்தினருக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுவது உகந்தது அல்லவெனவும் வடகொரியா குறிப்பிட்டுள்ளது.
வடகொரிய தம்மிடம் உள்ள அணுவாயுதங்களை கையளிக்கும் வரையில் அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட மாட்டாது என அமெரிக்க வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே வடகொரியா சீற்றம் அடைந்துள்ளது.
Related posts:
தாய்லாந்தில் தொடர் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி!
மலபார் கூட்டு பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கை!
சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி!
|
|