அமெரிக்காவில் மீண்டும் அகதிகள் குடியேற்றம்!

Tuesday, March 6th, 2018

அவுஸ்திரேலியாவினால் நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 26 அகதிகள் மீண்டும் அமெரிக்காவில் குடியேற்றப்படுகின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த 2 அகதிகளுடன் மொத்தம் 29 பேர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நடவடிக்கை அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளில் 1250 பேரை பொறுப்பேற்கும் அமெரிக்காவின் திட்டத்தின் கீழ் இடம்பெறுகிறது.

இதுவரையில் 220க்கும் அதிகமான அகதிகள் இத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் குடியேற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Related posts: