அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி – 19 பேர் படுகாயம்!

Tuesday, July 5th, 2022

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

அமெரிக்கா உருவான 246 ஆவது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள்களை கட்டி வருகின்றன.

இந்த நிலையில், இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது.

அணிவகுப்பு தொடங்கிய பின் 10 நிமிடங்களில் திடீரென வந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அப்பகுதி மக்கள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இந்தத் தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுதந்திர தின நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: