அமெரிக்காவில் பாரிய சூறாவளி – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, March 5th, 2019

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய சூறாவளியில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதில் அங்கு உள்ள பல்வேறு நகரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.

பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. பல பகுதிகளில் சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சூறாவளி காற்றில் சிக்கி ஏராளமான மின்கம்பங்கள் சரிந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதனால் சுமார் 5 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின.

இதேவேளை, சூறாவளியை தொடர்ந்து சில இடங்களில் கடும் மழை பெய்துள்ளமையினால் . நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஜார்ஜியா, புளோரிடா மற்றும் தெற்கு கரோலினா ஆகிய மாகாணங்களையும் சூறாவளி தாக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts: