அமெரிக்காவில் கடும் சூறாவளி – 14 பேர் பலி!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளி காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
லீ கவுண்டியின் பீராகார்டு நகரில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், லீ கவுண்டியில் சுமார் 5000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த சூறாவளி காரணமாக 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
ஜெர்மனி ஜனாதிபதி ஆதரவாளர்கள் நடத்தும் பேரணியில் எர்துவானின் உரைக்கு தடை!
அதிர்ஷ்டவசமாக நடுவானில் விமானங்கள் மோதிக்கொள்வது தவிர்ப்பு!
உயிர்நீத்த அமெரிக்க வீரர்களின் உடைமைகளை வழங்கியது வடகொரியா!
|
|