அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாரிய சுகாதார நெருக்கடியான கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை – ஜோ பிடன்!

Monday, November 9th, 2020

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடன் தனது ஆட்சிக் காலத்தில் கையாளவுள்ள முக்கிய விடயங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாரிய சுகாதார நெருக்கடியான கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துதல் தொடர்பிலேயே ஜோ பிடன் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்று திட்டம் தொடர்பான அறிவிப்பில் அமெரிக்காவில் அதிகளவான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும், அமெரிக்கர்கள் அனைவரும் முகக் கவசங்களை அணிவதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் ஜோ பிடன் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர அமெரிக்க பொருளாதாரம், உலகளாவிய ரீதியில் நிலவும் இன முரண்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களிலும் ஜோ பிடன் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடன் அதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ள போதிலும், ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்க மறுத்து டிரம்ப் பிடிவாதம் பிடித்துவரும் நிலையில், அடுத்த 73 நாட்களுக்குள் வெள்ளை மாளிகையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் புதிய ஜனாதிபதி; ஜோ பைடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: