அமெரிக்காவில் இஸ்லாமிய மதகுரு உட்பட இருவர் சுட்டு கொலை!

அமெரிக்காவின் குயின்ஸ் நிர்வாகப் பகுதியில் இஸ்லாமியப் போதகர் ஒருவரும், அவருடன் சென்றவரும் கொலை செய்யப்பட்டிருப்பது பற்றிய புலனாய்வை நியூயார்க் காவல்துறையினர் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை தொழுகைக்கு பின்னர், இமாம் மௌலானா அக்யன்ஜீ என்பவர், தாராம் உதீனுடன் என்பவருடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது, இருவரும் தலைக்கு பின்னால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தில் நூற்றுக்கு மேலானோர் கலந்து கொண்ட பேரணி ஒன்று நடைபெற்றிருக்கிறது.
இஸ்லாமியருக்கு எதிரான மனப்பான்மையுன் நடத்தப்பட்டதாகப் பார்க்கப்படும் இந்த கொலைக்கு, இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டி வருகின்ற குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை பலரும் குற்றம்சாட்டியிருக்கின்றனர். கொலைக்கான நோக்கம் பற்றி தெரியவில்லை என்று கூறும் காவல்துறை, மதத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடந்த்து என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.இந்த துப்பாக்கிசூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
Related posts:
|
|