அமெரிக்காவில் இருந்து கியூபாவுக்க 5 தசாப்தத்தின் பின் பயணித்த பயணிகள் விமானம்!

அமெரிக்கா, கியூபா நாடுகளுக்கிடையே முதன் முறையாக வர்த்தக ரீதியான விமான போக்குவரத்து 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளுக்கிடையே பகைமை இருந்து வந்தது. இவ்விரு நாடுகளுக்கிடையேயான பகைமையை மறந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கியூபா சென்று அந்நாட்டு அதிபர் ராவல் காஸ்ட்ரோவை சந்தித்து, இரு நாடுகள் தொடர்பான உறவை புதுப்பித்தார்.
இது இரு நாடுகளுக்கிடையே வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருந்தது. இதன் பயனாக இரு நாடுகளிலும் தூதரகங்கள் திறக்கப்பட்டன.மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ரீதியாக விமான போக்குவரத்து சேவை தொடங்கவும் முடிவு செய்திருந்தனர்.
இதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளுக்கிடையே 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பயணிகள் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது.
ஜெட்புளு என்ற விமான நிறுவனம் 150 பேருடன் தெற்கு புளோரிடாவில் இருந்து, கியூபாவின் சாண்டா கிளாரா விமானநிலையம் சென்றடைந்தது. அவ்விமானத்தில் அமெரிக்க போக்குவரத்துத்துறை அமைச்சர், ஜெட் புளு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆகியோரும் பயணித்தனர். இடு நாடுகளுக்கும் இடையே கடந்த 1961 ஆம் ஆண்டு கடைசியாக விமான சேவை நடத்தப்பட்டது. அதன் பின் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|