அமெரிக்காவில் ஆயுததாரி வெறியாட்டம் – 22 பேர் பலி !

Sunday, August 4th, 2019

அமெரிக்காவில் ஆயுததாரி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையினால் இதுவரை சுமார் 22 பேர் உயிரிழந்தும் 40 ற்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரபல வால்மாட் கட்டடத்தின் McDonald உணவகத்தினுள் திடீரென நுழைந்த ஆயுததாரி ஒருவர் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

வான்படை மற்றும் தரைப்படை களமிறங்கி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆயுததாரி என சந்தேகிக்கப்படும் 21 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெல்சாஸ் மாகாணத்தின் எல் பசோ பகுதியில் அமைந்துள்ளது வால்மார்ட் பல்பொருள் அங்காடி. வார இறுதி விடுமுறை என்பதால் அதில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பல்பொருள் அங்காடியின் உள்ளே திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினான். இந்த திடீர் தாக்குதலால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினர்.

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர் என அம்மாநில கவர்னர் கிரெக் அபார்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் 25க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

Related posts: