அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்!

அமெரிக்காவின் உற்பத்திகளுக்கு எதிரான வரி அறவீட்டை ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் ஆரம்பிக்கிறது.
அமெரிக்காவின் 2.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று அதிகரித்த வரியை அறவிடவுள்ளது.
முன்னதாக அலுமினியம் மற்றும் இரும்பு ஆகிய பொருட்களுக்கு 25 சதவீத மற்றும் 10 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறவிட உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பதிலாகவே ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
இதன்படி அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற மதுபான பொருட்கள், உந்துருளிகள் மற்றும் குடிபானங்கள் என்பவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் வரியை அறவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புதின்!
விமான இரைச்சலை குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை!
ஆற்றில் விழுந்த விமானம் – அமெரிக்காவில் சம்பவம்!
|
|