அமெரிக்காவின் விசா நடைமுறையில் மாற்றம்!

Friday, January 6th, 2017
அமெரிக்காவின் எச்1பி விசா நடைமுறைகளில் மாற்றங்களை செய்து அதை சீர்திருத்துவதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டது.

அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசாக்களை வழங்கி வருகிறது.

இந்த எச்-1 பி’ விசாக்களால் அமெரிக்காவில், உள்நாட்டினரின் வேலை வாய்ப்பு பாதிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது

இதையடுத்து ‘எச்-1 பி’ விசாக்களில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து, பிற நாட்டினர் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது.

கடந்த ஆண்டு இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலான போதிலும் கடும் எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை.

இதையடுத்து, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட எச்1பி விசா சீர்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த குடியரசு கட்சி எம்.பி.க்கள் டேரல் இஸாவும், ஸ்காட் பீட்டர்சும் இம்மசோதாவை தாக்கல் செய்தனர்.

இதன் படி எச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஆண்டு சம்பளம் 100,000 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப், வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறியுள்ளார். தலைமை மாற்றம் நிகழும் இந்த வேளையில் அமெரிக்க காங்கிரசில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது நிறைவேறினால், பிறநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களால் அமெரிக்கா சென்று எச்1பி விசாவின் கீழ் பணியாற்ற முடியாத சூழல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

06-1483680987-us234

Related posts: