அமெரிக்காவின் வர்த்தக நிபந்தனைகளில் மாற்றம் கொண்டுவர விரும்பும் டிரம்ப்!

Tuesday, January 17th, 2017

உலகின் பிற நாடுகளோடு அமெரிக்கா செய்கின்ற வர்த்தகங்களுக்கான நிபந்தனைகளை மாற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு இருக்கின்ற வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்க குறிப்பாக, சீனாவோடு இருப்பதை குறைக்க விரும்புவதாக இலண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் நாளேடுக்கும், ஜெர்மனி பில்டு செய்தித்தாளுக்கும் வழங்கிய பேட்டியில் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யாவோடு அணு ஆயுதங்களை குறைக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறை தெரிவித்திருக்கும் டிரம்ப், அதற்கு பிரதிபலனாக மாஸ்கோ மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை திரும்ப பெறலாம் என்றும் கூறியுள்ளார்.

நேட்டோ பற்றி குறிப்பிடுகையில், பிற நாடுகள் நேட்டோவுக்கு அதிக உதவித் தொகை அளிப்பதோடு, கூட்டணி நாடுகளிடமிருந்து இன்னும் சிறந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா பெறுகின்ற நேரமிது என்று கூறியுள்ளார்.

_93583360_gettyimages-631335270

Related posts: