அமெரிக்காவின் யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி பிரயோகம்!

Thursday, April 5th, 2018

அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் அமைந்துள்ள யூடியூப் தலைமையகத்தினுள் பெண்ணொருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதன் போது இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பின்னர் குறித்த பெண்ணும் தனக்கு தானே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பெண் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரின் காதலர் என சந்தேகிக்கப்படும் 36 வயதான நபரும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிகவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: