அமெரிக்காவின் மேற்குக்கரைகு வட கொரியா ஏவுகணை தாக்குதல் சோதனை?

201704160706409022_North-Korea-fails-in-new-missile-test-Seoul_SECVPF Monday, October 9th, 2017

அமெரிக்காவின் மேற்குக்கரை பகுதிக்குச் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள வட கொரியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய நாடாளுமன்றத்தின் சர்வதேச தொடர்புகள் குழுவின் உறுப்பினர் என்டன் மொரொசொவவின் அவதானிப்புக்களை மேற்கோள்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான ஒத்திகை நடவடிக்கை திட்டம் வடகொரியாவினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி, வட கொரியா ஏதாவதொரு ஏவுகணை சோதனையொன்றை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அமெரிக்க மத்திய புலனாய்வு பணியகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.