அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்  -இரகசியங்கள் !

Monday, October 23rd, 2017

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஜோன் எப். கெனடி கடந்த 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி ரெக்சஸ் மானிலத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்

இவரின் கொலை தொடர்பாக கடந்த 54 வருடங்களாக பல்வேறு கருத்துக்களும் சந்தேகங்களும் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இந்த கொலை தொடர்பான ரகசியங்கள் வெளியிடப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.

ஒஸ்வால்ட் என்பவரால் கெனடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பல கோப்புக்கள் அமெரிக்க அரசாங்கத்தினால் இதுவரை காலமும் ரசகியமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இந்த ரகசிய கோப்புக்கள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அதேவேளை அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்டு வந்த ரகசிய ஆவணங்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதனை அறிய அமெரிக்க மக்கள் ஆவலுடன் உள்ளதாக வாஷிங்டனில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: