அமெரிக்காவின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் – பிரான்ஸ்!

trump Wednesday, December 6th, 2017

அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அறிவிக்க தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு குறித்து தான் கவலை அடைந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எந்த முடிவாக இருந்தாலும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பேச்சுவார்த்தையின் வரையறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறு அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தும் என ஜோர்தான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலேயே ஜெரூஸலம் நகர் அமைந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு தரப்பும் ஜெரூஸலத்துக்கு உரிமை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் எந்த முடிவும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் எனவும் பிரான்ஸ் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


எகிப்தியத் தீவுகளை சவுதிக்கு கொடுக்கும் உடன்பாடு செல்லாது !
14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் - எச்சரிக்கிறது யுனிசெப்!
ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு!
மக்களின் உரிமைகள் தொடர்பில் தெரேசா மே மறுபரிசீலனை செய்ய வேண்டும்
அரசுப்படைகளின் தாக்குதல் -  சிரியாவில் 250 பேர் உயிரிழப்பு!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!