அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளருக்கு செனட் ஒப்புதல்!
Wednesday, January 25th, 2017அமெரிக்க இராஜாங்க செயலாளர் பதவிக்கு ரெக்ஸ் டில்லசனை நியமிக்க அந்நாட்டு வெளிநாட்டு உறவுகள் தொடர்பான செனட் குழு குறுகிய வாக்கு வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
எக்ஸோன் மொபைல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான டில்லசனின் ரஷ்யாவுடனான நெருங்கிய வர்த்தக உறவு அவரது நியமனத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் டில்லசனின் நியமனத்திற்கு செனட் குழு கட்சி அடிப்படையில் பிளவுபட்டிருந்தது. எனினும் வாக்கெடுப்பில் குடியரசு கட்சியினர் அவருக்கு ஆதரவாக 11 வாக்குகளை பதிவு செய்ததோடு 10 ஜனநாயக கட்சியினரும் எதிராக வாக்களித்தனர்.
இந்நிலையில் இந்த பதவிக்கு ஒப்புதல் அளிக்க குடியரசு கட்சி அதிக்கம் கொண்ட செனட்டில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இதன்படி டிரம்ப் தேர்வு செய்த மூன்று அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் செனட் குழு இதுவரை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே தற்காப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டீஸ், உள்துறைப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெல்லி இருவருக்கும் செனட் குழு ஒப்புதல் அளித்துவிட்டது.
அதேபோன்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சி.ஐ.ஏ அமைப்பின் இயக்குநராக மைக் பாம்பேயோவை உறுதி செய்து அமெரிக்க செனட் அவை ஒப்புதல் அளித்துள்ளது
Related posts:
|
|