அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐ.நா வின் அங்கத்துவ நாடுகள் கண்டனம்!

Monday, December 11th, 2017

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலேத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கிகரித்த விடயத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் 14 நாடுகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

இந்த விடயமானது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை சட்டத்திட்டங்களுக்கு எதிரானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியா, பிரான்ஸ், சுவீடன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபையினால் எதிர்ப்பினை வெளியிட முடியாதென ‘நிவ்யோர்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய அங்கிகாரத்தின் பின்னர் தற்போது ‘டெல் அவிவ்வில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தை ஜெரூசலேத்திற்கு மாற்றும் நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த தூதுவராலய மாற்றம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், இதனை நீண்ட காலத்திற்கு முன்னர் செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதன் மூலம், இஸ்ரேல் பலஸ்தீனிய பிரச்சினைகளுக்கு சமாதான தீர்வொன்றை துரித கதியில் எட்டுவதற்கு வழி ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: