அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த பூகம்பம்: 2 பேர் பலி!

Wednesday, December 21st, 2022

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சகதிவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், 2 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஹம்போல்ட் கவுன்டி பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் 16.1 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. அங்கு குடியிருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் மின் விநி யோகம் துண்டிக்கப்பட்டது. தவிர வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து சிதறியுள்ளன. வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தூக்கி எறியப்பட்டன. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: