அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரின் இந்திய பயணம் ஆரம்பம்!

Wednesday, June 26th, 2019

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தமது இந்திய பயணத்தை இன்று ஆரம்பிக்கிறார். அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது இந்திய – அமெரிக்க கூட்டுவணிக முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

அண்மையில் இந்தியாவிற்கான ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை அமெரிக்க ஜனாதிபதி இரத்துச் செய்தார். பின்னர் அமெரிக்க பண்டங்கள் சிலவற்றுக்கான வரியை இந்தியா அதிகரித்தது. இவ்வாறான சூழ்நிலையில், மைக்பொம்பியோவின் பயணம் அமைந்துள்ளது.

அவர் இந்திய பயணத்தின் நிறைவில் இலங்கைக்கு வருவார் என்று சொல்லப்பட்டிருந்தாலும், அந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் சோபா உடன்படிக்கை தொடர்பான எதிர்மறை கருத்துக்களாலேயே அவரது பயணம் இரத்து செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அவரது கால அட்டவணையில் உள்ள அதிக வேலை பளுவே இந்த விஜயம் இடம்பெறாமைக்கு காரணம் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts: