அமெரிக்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த ஈரான்!

ஈரானிய அமெரிக்க வர்த்தகர் ஒருவருக்கும், அவருடைய தந்தைக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக ஈரானிய அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சியாமாக் நமாஸியும், அவருடைய தந்தையும் யுனிசெப் பிரதிநிதியுமான பகுவர் நமாஸியும் ஈரானுக்கு விரோதமான அமெரிக்க அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு தெஹரானில் பயணம் மேற்கொண்டபோது, சியாமாக் நமாஸி கைது செய்யப்பட்டார். ஷாயின் கீழுள்ள இரானின் எண்ணெய் வளம் கொண்ட குஸெஸ்தான் மாகாணத்தில் ஆளுநராக பகுவர் நமாஸி பணியாற்றியுள்ளார்.
அமெரிக்க அரசிடம் இருந்தோ, நமாஸியரின் ஆதரவாளர்களிடம் இருந்தோ இதுபற்றி எவ்வித கருத்தும் வெளியாகவில்லை.
Related posts:
தமிழகத்திற்கு தேவை ஜனாதிபதி ஆட்சி! சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் மனு!
ஜேர்மனியில் தீவிரவாத அச்சுறுத்தலை தடுக்க திட்டம் !
இந்திய மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா!
|
|