அமெரிக்கத் தாக்குதல் நீண்டகால திட்டம் – பாதுகாப்பு பிரிவு!
Thursday, October 5th, 2017அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையாகும் என அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா லாஸ் வெகாஸ் நகரில் கடந்த முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்திருந்தனர்,இசை நிகழ்ச்சியின் போது 64 வயதான நபரொருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த சம்பத்தின் பின்னர் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்,துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தன்னை தானனே தற்கொலை செய்வதற்கு முன்னர் அவரின் வங்கி கணக்கிற்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
சுவாதி வழக்கு: வாக்குமூலங்கள் இன்று நீதிமன்றத்தில்!
அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்- தம்பிதுரை அறிவிப்பு!
பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் திடீரென மாயம்!
|
|