அமலுக்கு வந்தது சிரியாவில் போர் நிறுத்தம் !
Tuesday, September 13th, 2016
சிரயாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இது எப்படி நீடிக்கும் என்று பல சந்தேகங்கள் இருந்த போதிலும் இந்த போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது.
சிரியா முழுவதும் ஏழு நாட்கள் இந்த போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என சிரியா ராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது;ஆனால் ஆயுத குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டால் தீர்க்கமாக அதற்கு பதிலடி கொடுக்க தங்களுக்கு உரிமை இருப்பதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
பல போராளிக்குழுக்கள் அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே ஏற்பட்ட இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வரவேற்பளித்துள்ளன.ஆனால் அது எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்து சந்தேகங்களையும் எழுப்பி உள்ளன; ஒன்றோடொன்று தொடர்புடைய ஜிகாதி அமைப்புகள் எவ்வாறு செயல்படுவார்கள் என தெரியவில்லை.
இந்த போர் நிறுத்தம் முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் உதவிப் பொருட்களை விநியோகிக்க பயன்படும் என உதவி முகமைகள் நம்புகின்றனர்.
Related posts:
|
|