அப்பா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் – மைக்கல் ஜாக்சனின் மகள் முறைப்பாடு!

Thursday, January 26th, 2017

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான மைக்கல் ஜாக்சன் கடந்த 2009 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்நிலையில், ஜாக்சனின் மகளான பாரிஸ் ஜாக்சன் தனது அப்பா கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரைகளை உட்கொண்டதுதான் அவர் இறப்பிற்கு காரணம் என்று கூறப்பட்டது இது தொடர்பில் பாரிஸ் ஜாக்சன் தெரிவித்திருப்பதாவது,

என் அப்பாவை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இது ஒரு சதியாக இருக்கலாம். காரணம் என் அப்பா பாடகராக இருந்த காலகட்டங்களில் ஏராளமான பாடகர்கள் நிறைய சிக்கல்களில் இருந்தனர். அவர்கள் நிலைமை மிகவும் வருந்தத்தக்க வகையில் இருந்தது. மேலும் இது ஒரு சதுரங்க விளையாட்டு. இதை சரியான முறையில் விளையாடி வெற்றி பெற முயற்சிப்பேன். என் அப்பாவுக்கு மர்மமான முறையில் நிறைய எதிரிகள் இருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Paris-Jackson-Michael-Jackson-Main

Related posts: