அப்பலோவில் ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை..! – ஓபிஎஸ்!
Wednesday, February 8th, 2017தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் வைத்தியசாலைக்கு சென்றேன். எனினும், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை என முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 75 நாட்களும் சென்னை அப்பல்லோ வைத்தியசாலைக்கு வந்து சென்றேன். எனினும், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை.
அவரை பார்க்க நான் பலமுறை முயற்சி செய்திருந்தேன். வேறு எந்த ஒரு முக்கிய தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் சந்தித்து பேசியதாக நான் கேள்விப்படவில்லை.
அம்மா உயிரிழந்துவிட்டதாக கேள்விப் பட்டதும் எங்களுக்குள் இருந்த அனைத்து சக்திகளும் மறைந்து விட்டது. அவர் விட்டுச் சென்ற பணிகளை செய்வதே நன்றிக் கடனாக இருக்கும்.
இதேவேளை, சந்தேகத்திற்கிடமான கேள்விகளை முன் வைக்க மனம் இடம் கொடுக்கவில்லை. அத்துடன், மனதில் உள்ள விஷயங்களில் நூற்றுக்கு பத்து வீதத்தையே தற்போது பேசியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|