அனைத்து நாடுகளுக்கும் தென்சீனக் கடல் பகுதி பொதுவானது – இந்தியா!

Friday, July 17th, 2020

தென்சீனக் கடல்  பகுதி அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என இந்தியா தெரிவத்துள்ளது.

இது குறித்து  இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவிக்கையில், 

“தென் சீனக் கடல் பகுதி அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. தென்சீனக் கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியை வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் உரிமைக்கோரி வருகின்றன.

இந்நிலையில் குறித்த பரப்பு முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என சீனா அறிவித்துள்ளதுடன், அந்த பகுதியில் படைபலத்தை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: