அனைத்து குடிமகனுக்கும் கட்டாய ஊதியம் –  சாதனை படைத்த சுவிஸ்!

Wednesday, May 18th, 2016

சுவிட்சர்லாந்து நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சுவிஸ் பிரசாரக் குழுவினர் தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.

உலக நாடுகளிலேயே முதன் முறையாக சுவிஸில் உள்ள குடிமகன் ஒவ்வொருவருக்கும் அடிப்படை ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளது.

இந்த புதிய சட்டம் மூலம் பணிக்கு செல்லும் அல்லது பணி இல்லாமல் இருக்கும் ஒவ்வொரு சுவிஸ் குடிமகனுக்கும் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை அரசு மாதந்தோறும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புதிய சட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே அதனை நடைமுறைப்படுத்தப்படும்.

இது தொடர்பாக அடுத்த மாதம் 5ம் திகதி பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த புதிய சட்டத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி Basic Income Switzerland என்ற பிரசாரக் குழுவினர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் உலகிலேயே அதிக நீளமுள்ள விளம்பர பலகையை உருவாக்கியுள்ளனர்.

இந்த விளம்பரமானது 87,350 சதுரடி பரப்பளவு கொண்டதால், இது தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த பிரசாரக் குழுவை சேர்ந்த நபர்கள் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு அரசு 2,500 பிராங்க் (3,74,900 இலங்கை ரூபாய்) வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு விடுத்துள்ளனர்.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், இளைஞர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு குறிப்பிட்ட ஊதியம் அரசு சார்பாக வழங்கப்படும்.

எனினும், இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் அடுத்த மாதம் நடைபெற உள்ள பொது வாக்கெடுப்பில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: