அனிமேஷன் ஸ்டுடியோவில் தீ விபத்து – 38 பேர் காயம்!

Thursday, July 18th, 2019

ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 38 பேர் காயமடைந்துள்ளதுடன், குறித்த ஸ்டூடியோவும் தீக்கிரையாகியுள்ளது.

குறித்த தீ விபத்தானது ஜப்பான் நேரப்படி இன்று கலை 10.30 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.

தீ விபத்து சம்பந்தமாக ஒருவரை ஜப்பான் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், குறித்த நபரால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத்தாக்குதல் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந் நிறுவனத்தில் அனிமேஷன்கள் வேலைகளை உருவாக்குவதுடன், அதனை விற்பனை செய்வதும் மற்றும் அனிமேட்டர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: