அந்திராவில் 47 டிகிரி செல்சியசிற்கும் அதிகமான வெப்பம்!

Monday, May 22nd, 2017

அந்திரா மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஐந்து பகுதிகளில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியசிற்கும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, மாநிலத்தின் 23 இடங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரியை விட அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் ஆந்திராவில் மாத்திரம் 87 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் காணப்படும் அதிக வெயில் காரணமாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதிக வெயில் காரணமாக வீடுகளை விட்டு வெளியில் செல்வதற்கு மக்கள் அச்சம் வெளியிடும் அதேவேளை, தற்காப்பு நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில் மாத்தரம் அனல் காற்றின் தாக்கம் காரணமாக சுமார் 700 பேர் வரையில் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.

Related posts: