அத்துமீறினால் அழிப்போம்: அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!

Tuesday, July 7th, 2020

அமெரிக்கா சீன கடல் எல்லையில் நிறுத்தி உள்ள அணு ஆயுத போர் கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிப்போம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்தே தென் சீன கடல் எல்லையில் மோதல் நிலவி வருகிறது.

தென் சீன கடல் எல்லை பகுதியில் 90% எங்களுக்கு தான் சொந்தம் என்று சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் சீனாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது.

இதேவேளை சீனாவை அடக்கும் வகையில் தற்போது அங்கு மேலும் இரண்டு போர் கப்பல்களை அமெரிக்கா களமிறக்கி உள்ளது. இந்த இரண்டு கப்பல்களும் அணு ஆயுத ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது.

அமெரிக்காவின் செயற்பாடு சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் DF-21D மற்றும் DF-26 என்ற இரண்டு ஏவுகணைகளை அந்த பகுதியை நோக்கி திருப்பி உள்ளது.

அமெரிக்கா அத்துமீறினால் போர் கப்பல்களை தாக்கி அழிப்போம் என சீனா கூறிய நிலலையில், உங்களை பார்த்தும் உங்களின் ஏவுகணைகளை பார்த்தும் எங்களுக்கு அச்சம் இல்லையென அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது

Related posts: