அதிவேக ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!
Friday, December 14th, 2018
துருக்கியில் அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 43 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் இரும்பினால் அமைக்கப்பட்ட குறித்த மேம்பாலம் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ரயில் பெட்டிகள் சிக்கி உருக்குலைந்தததுடன் 2 பெட்டிகள் தடம்புரண்டன.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டிகளில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவர்கள் வெளியேற்றப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Related posts:
கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை : உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும் - உலக சுகாதார நிறுவ...
அவுஸ்திரேலியாவில் பொலிஸாரை குறிவைத்து தாக்குதல் - 6 பேர் பலி – தீவிர விசாரணையில் பொலிசார்!
வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!
|
|