அதிர்ந்து போன அமெரிக்கா: பீதியில் உறைந்த மக்கள்!

Saturday, December 31st, 2016

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 24 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று 24 மணி நேரத்தில் 24 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. சேக்ரா மென்டோ முதல் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ்வேகாஸ் உள்ளிட்ட பகுதிகள் அதிர்ந்து குலுங்கி உள்ளன.

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கங்கள் 3 முதல் 5.6 ரிக்டர் வரை பதிவாகியுள்ளது. லேக் தகோயே பகுதியில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Earthquake-delhi

Related posts: