அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ஜெ.தீபா !

Tuesday, January 17th, 2017

மறைந்த தமிழக முன்னாள முதல்வர் ஜெயலலிதாவின் மருமகள் ஜெ.தீபா அதிரடி முடிவெடுத்துள்ளார். எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாளான இன்று எம்ஜிஆர் சிலை மற்றும் சமாதிக்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்திய ஜெ.தீபா, தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தனது அடுத்த அறிவிப்பை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் திகதி தெரிவிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று தனது அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்பது தனது ஆசை என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, அதிமுக தொண்டர்கள் பலர் தனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தனக்கு ஆதரவு தெரிவித்ததாக பரவி வரும் தகவலை மறுத்துள்ள தீபா, அந்த செய்தி ஒரு வதந்தி என குறிப்பிட்டுள்ளார். தீபாவின் இந்த அறிவிப்பின் மூலம் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், இது எதிர்தரப்பினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

dee

Related posts: