அதிபர் ஜேகப் ஜூமாவிற்கு எதிராக திரளும் ஆளுங்கட்சி!

Tuesday, September 6th, 2016

தென் ஆபிரிக்காவில் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவினர், கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்றப்போவதாக விடுத்த அச்சுறுத்தலை அடுத்து ஜோகன்ஸ்பெர்க்கில் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை மீதான தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய கட்சி மாநாட்டை முன்னரே நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, அதிபர் ஜேகப் ஜூமாவிற்கு பதிலாக புதிய தலைவரை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது, சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூர் நகராட்சி தேர்தல்களில் ஆளும் ஆபிரிக்கா தேசிய காங்கிரஸ் மிக மோசமான பின்னடைவை சந்தித்தது.

தென் ஆபிரிக்காவில் நிலவி வரும் அதிக வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அதிபரை சுற்றியுள்ள மோசடி குற்றச்சாட்டுக்கள் ஆகியன ஆபிரிக்கா தேசிய காங்கிரஸ் கட்சியின் பெருமைக்கு களங்கம் விளைவித்து இருக்கிறது.

160429093140_jacob_zuma_640x360_reuters_nocredit

160408144054_south_africa_640x360_epa

Related posts: