அதிபராக பதவியேற்கும் வரை செனிகோலில் தஞ்சம் பெறுகிறார் அடாமா பாரோ!
Monday, January 16th, 2017காம்பியாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அடாமா பாரோ அதிபராக பதவியேற்கும் வரை செனகோலில் விருந்தாளியாக தங்க அந்நாட்டு அதிபர் மேக்கி சால் ஒப்புக் கொண்டுள்ளார்.
தற்போது பதவியில் உள்ள யாக்யா ஜமே, கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். லைபீரியாவின் தலைவர் எல்லன் ஜான்சன் சர்லீஃப் முன்வைத்த கோரிக்கையை அடுத்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாலியில் நடைபெற்ற ஆஃப்ரிக்க தலைவர்களின் உச்சி மாநாட்டில் பாரோவுக்கு தலைவர்கள் அளித்த ஆதரவைத் தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜமே, அவருடைய பதவிக்காலம் முடிவடையும் ஜனவரி 19 ஆம் தேதியுடன் பதவியிலிருந்து விலகவில்லை என்றால் ராணுவ ரீதியாக தலையிடுவோம் என்று எகோவாஸ் எனப்படும் மேற்கு ஆஃப்ரிக்க நாடுகளின் பொருளாதார சமூகமானது தெரிவித்துள்ளது.
Related posts:
தொடரும் ஆபிரிக்க மக்களின் துயரம்!
சிரியாவில் இரசாயன தாக்குதல்!
பேருந்து தீப்பிடித்து 52 பேர் உயிரிழப்பு!
|
|