அதிக வெப்பம் – முன்னிலையில் இந்தியாவின் 8 நகரங்கள்!

Tuesday, June 4th, 2019

கடந்த 24 மணித்தியாலங்களில் உலகில் அதிக வெப்பம் நிலவும் நகரங்களின் பட்டியலிலுள்ள முதல் 15 இடங்களில் இந்தியாவின் 8 நகரங்கள் உள்ளடங்கியுள்ளன.

பருவநிலை மாற்றம் தொடர்பில் ஆராயும் குழுவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் மற்றும் உலகமயமாதல் என்பன காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பநிலை அதிகரித்துவருகின்றது.

குறித்த அறிக்கையில் முதல் 15 இடங்களில் இந்தியாவின் 8 நகரங்கள் இடம்பிடித்துள்ளதுடன், மீதமுள்ள நகரங்கள் இந்திய அண்டை நாடுகளான பாகிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கரு மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன் உத்தர பிரதேஷின் பந்தா, ஹரியாணாவின் நருணால், கோட்டா, ஹைதராபாத், ஜெய்ப்பூர் லக்னோ மற்றும் டெல்லி ஆகிய இடங்களே குறித்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் அனல்காற்று நீடிக்கும் என்பதுடன் இதனால் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: