அதிகாரிகள் தப்பியோட்டம் : சிறைச்சாலையில் 39 பேர் பலி!

Monday, September 3rd, 2018

லிபியாவில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் இந்த மோதலின் போது சுமார் 400 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு ஆயுத குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலமையின் போது, சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட கைதிகள் சிறைகளை உடைந்து தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாட்டில் தற்போது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ட்ரிப்பொலியில் உள்ள ஐன் சாரா என்ற குறித்த சிறையில் லிபிய முன்னாள் தலைவர் மொஹமூர் கடாபியின் ஆதரவாளர்களும், 2011 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுமே பெருமளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: