அதிகாரிகளை உயிருடன் கொளுத்துவோம் – பகிரங்க மிரட்டல்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் ஆரம்பப் பகுதிகளை விசாரிக்கச் சென்ற அதிகாரிகளை உயிருடன் தீயிட்டு கொளுத்திவிடுவதாக நூறு பேர் கொண்ட கும்பல் மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் ரியோ மகாணத்தில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதன் ஆரம்பப்பகுதி குறித்த விசாரணையை கண்காணிக்க விசாரணை அதிகாரிகள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.காட்டுப்பகுதியில் விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் 7 பேரை நூறு பேர் கொண்ட கும்பல் ஒன்று இடை மறித்து அவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
மேலும் அவர்கள் அப்பகுதியில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை அழிக்க வற்புறுத்தியுள்ளனர், மட்டுமின்றி அவர்களுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டினால் தீயிட்டு கொளுத்திவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.அதை அழித்த பின்பும், அவர்களுடன் நடந்த 12 மணி நேர விவாதத்திற்கு பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காட்டுத்தீ பரவிய இடத்தில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் நிலங்களை ABSL என்ற தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதை அப்பகுதியில் விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் ஆளில்லா விமானம் மூலம் எடுத்த வீடியோவின் மூலம் நிரூபிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
Related posts:
|
|