அதிகமான பிரித்தானியர்கள் செயற்றிறன் அற்றவர்கள்!

பிரித்தானியாவிலுள்ள 20 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உடல்ரீதியில் செயற்றிறன் அற்றவர்களாக உள்ளதாக அந்த நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவமொன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரஜைகளின் செயற்றிறன் அற்ற நிலைமை, இதய நோய்கள் மற்றும் 1 தசம் 2 பில்லியன் பவுண்ஸ் சுகாதார செலவுகளுக்கு வழிவகுக்கும் எனவும் பிரிட்டிஸ் கார்ட் பௌண்டேஷன் (British Heart Foundation ) நிறுவனம் கூறியுள்ளது.
வாரமொன்றில் 150 நிமிடங்களுக்கு குறையாத உடற்செயற்பாடு மற்றும் வாரத்தில் இரண்டு நாட்கள் உடலை வலிமைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாதவர்கள் உடற்செயற்றிறன் அற்றவர்கள் என பிரித்தானிய அரசாங்கம் வரைவிலக்கப்படுத்தியுள்ளது.
இதன்பிரகாரம் பிரித்தானியாவில் 8 தசம் 3 மில்லியன் ஆண்களும் 11 தசம் 8 மில்லியன் பெண்களும் செயற்றிறன் அற்றவர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடமேற்கு இங்கிலாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் வட கிழக்கு இங்கிலாந்து ஆகிய இடங்களில் செயற்றிறன் அற்றவர்கள் அதிகளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
|
|