அண்டார்டிகாவில் முதல் ஆய்வுக்கு பிரிட்டன் அனுப்பும் மஞ்சள் நீர்மூழ்கி கலன்!

Tuesday, March 14th, 2017
அண்டார்டிகாவுக்கான தனது முதல் ஆராய்ச்சிப் பணிக்காக போட்டி மெக்போட்ஃபேஸ்என்ற மஞ்சள் நீர்மூழ்கி கலனை ஒன்றை பிரித்தானியா அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காலநிலை மாறுதலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் உலகின் மிகக் குளிரான மற்றும் ஆழமான சில நீர்ப்பகுதிகளில் ஆய்வுகளை இந்த நீர்மூழ்கி கலன் மேற்கொள்ளும்.
பிரிட்டனின் புதிய துருவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் கப்பலுக்கு என்ன பெயர் வைப்பது என்று பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
போட்டி மெக்போட்ஃபேஸ் என்ற பெயர் ஆய்வு கப்பலுக்கு பொருத்தமாக இருக்காது என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர். அதனால், அதில் கொண்டு செல்லப்படும் ஆளில்லா நீர்மூழ்கிக் கலனுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது.

Related posts: