அணுவாயுத சோதனைகள் விளையாட்டல்ல – வடகொரியா!  

Friday, October 27th, 2017

வடகொரியாவின் அணுவாயுத சோதனைகளை கேள்விக்கு உள்ளாக்காகக் கூடாது என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீ.என்.என். ஊடகத்துடனான செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் வடகொரியா எப்போதும் சொல்வதை செயற்படுத்தி வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார ரீதியாக பல்வேறு வழிகளிலும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது.இராணுவ ரீதியான தீர்மானத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்கா, இராணுவப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறது.

இது ஜனநாயகத்தை நோக்கி நகரும் செயற்பாடு என்று கருதப்படுமாக இருந்தால் அது பிழையானது என்று அவர் தெரிவித்துள்ளார்

Related posts: